ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள ஜூஜூவாடி ஆர்டிஓ சோதனைச் சாவடியில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அவரது உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் அங்கிருந்தனர்.
இந்த சோதனையில், பணியில் இருந்த அதிகாரிகளிடமிருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தொகை தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
