இளையான்குடியில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

இளையான்குடி, மார்ச் 12: வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இளையான்குடியில் திமுக சார்பில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட பொருளாளர் முகம்மது தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், தலைமை கழகப் பிரதிநிதி அன்புநிதி சிறப்புறையாற்றினர். கூட்டத்தில் மானாமதுரை தொகுதி வேட்பாளரை திமுக தலைவர் ஸ்டாலின், அறிவித்தவுடன் வேட்பாளரை வெற்றிபெற செய்ய பாடுபடுவது எனவும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல், தபால் வாக்காளர்களாக வருவதை தடுத்திட, தேர்தல் ஆணையம், தலைமை கழகம், கழகத் தோழர்கள் ஆகியோரை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நெசவாளர் அணி முருகானந்தம், தலைமை கழகப் பேச்சாளர் அய்யாச்சாமி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு அணி நாச உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: