திண்டுக்கல்: கொடைக்கானலில் இளைஞர்கள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதை காளான் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. புகாரை அடுத்து கொடைக்கானலில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்றிரவு ஏரி சாலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 3 பேரை கைதுசெய்தனர்.
