திருச்சி மாவட்டம் அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி பின்புறம் உள்ள கணபதி நகரில் அமைந்துள்ள ஒரு பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
