மேற்குவங்கத்தில் வருகிற 24ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதி இடைத்தேர்தல்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் பதவி விலகியதால் காலியான மூன்று மாநிலங்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 24ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.

மாநிலத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒரு சாரார் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கட்சியின் தலைவர் மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மற்றொரு பிரிவினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் எம்பிக்களிலும் சிலர் கட்சியின் மீது அதிருப்தி தெரிவித்தனர். சிலர் அதிருப்தி தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிங் பாரைக் ஆகியோர் கட்சியின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து கடந்த மாதம் வெவ்வேறு தேதிகளில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட 3 மாநிலங்களவை தொகுதிகளிலும் வருகின்ற 24ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

Related Stories: