புதுடெல்லி: கூட்டுறவு அமைச்சகத்தின் 5வது நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், ‘‘இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவை வழங்கி வரும் பாரத் டாக்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் அது 500 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். பாரத் டாக்சி பாணியில் கூட்டுறவு துறையில் புதிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை அமைக்க உள்ளோம்.
இது காப்பீட்டுத் துறையில் கூட்டுறவு அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவும். உரம் சார்ந்த கூட்டுறவு நிறுவனமான இப்கோ ஏற்கனவே ஒரு ஜப்பானிய நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியின் மூலம் காப்பீட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளது’’ என்றார்.இந்நிகழ்ச்சியில் அமித்ஷா 75,000 டன் கொள்ளவு கொண்ட 135 கிடங்குகளை ஒப்படைத்தல், 85 கிடங்குகளை திறந்து வைத்தல் போன்ற திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா, 47 சேமிப்பு கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
