கோவை, மார்ச் 11: கோைவ, பொள்ளாச்சியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு: கோவை தெற்கு: கோவை தெற்கு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சேலஞ்சர் துரை என்கிற துரைசாமி (62) கோவை புதுசித்தாபுதூர் பாலசுந்தரம் ரோட்டில் வசித்து வருகிறார். ‘‘சேலஞ்சர்ஸ் கெமிக்கல் அண்ட் பாலிமர்ஸ் பிரைவேட் லிமிடெட்’’ என்னும் கெமிக்கல் ஆலை வைத்துள்ளார். எம்.ஏ. (சமூகவியல்) படித்துள்ளார். இவரது தந்தை பெயர் ராமசாமி கவுண்டர். மனைவி பெயர் கண்ணம்மாள். செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 5 ஆண்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்தார். பின்னர், ஜெயலலிதாவால் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அ.தி.மு.க. மூன்றாக உடைந்தபோது டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். தற்போது, அக்கட்சியில் கோவை மேற்கு மாவட்ட செயலாளராகவும், கட்சியின் அமைப்பு செயலாளராகவும் உள்ளார்.