×

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பிரேமலதா கண்டனம்

 

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
எனவே, வீட்டில் பாதுகாப்பாக தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கே இந்த நிலை ஏற்பட்டால், பாதுகாப்பை தேடி மக்கள் எங்கு செல்வது, எத்தனை ‘சிங்கப்பெண்’ திட்டங்கள் இருந்தாலும், காவல்துறை இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்களை முழுமையாக தடுக்க முடியவில்லையே என்று மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதற்கு நிரந்தரமான தீர்வு எப்போது கிடைக்கும். இந்தச் சம்பவம் குறித்து உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Premalatha ,Chennai ,DMDK ,General Secretary ,Pasumpon Nagar, Ramanathapuram district ,
× RELATED தனிநபர்கள் தலையீடு இருக்காது...