சென்னை: விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதா? டேக் டைவர்ஷன்’ ரீல்ஸ் ஆட்சிக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள் என்று தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த திமுகவினர் கைது. தவெக ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு.
இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது. அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும். “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
* வரும் 5ம் தேதி மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். விளையாட்டு மேம்பாடு தொடர்பாக பட்டப்படிப்பு படித்து வந்த அவர், தற்போது படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ளார். இந்நிலையில், இன்பநிதி படித்த கல்லூரியில் அடுத்த மாதம் (ஜூலை) பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, பேரன் இன்பநிதி ஆகியோர் ஜூலை 5ம் தேதி லண்டன் புறப்பட்டு செல்கின்றனர். பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின், சுமார் 10 நாட்கள் அங்கேயே தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு, சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
