- கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம்
- சென்னை
- தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி பெற்ற கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம்
- தங்கராஜ்
- ஆசிரியர் தேர்வு வாரியம்
- கல்வித் துறை
- நுங்கம்பாக்கம், சென்னை
சென்னை: தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் தங்கராஜ் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இயக்குநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.பிறகு சங்க மாநில தலைவர் தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு உயர்கல்வித் துறை 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2025 டிசம்பர் 27ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. 48 பாடப்பிரிவுகளில் 5 ஐந்து பாடப்பிரிவுகளுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவினை 2026 பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2026 மார்ச் 11, 12ம் தேதிகளில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றனர். இவர்களில் மார்ச் 13ம் தேதி ஐந்து பேருக்கு மட்டும் பணி ஆணையை தமிழக உயர்கல்வித்துறை வழங்கியுள்ளது. பணி ஆணை பெறப்பட்ட ஐந்து பேரில் 2 ேபரின் பணி அனுபவ மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள 43 பாடபிரிவுகளுக்கு ஜூன் 25ம் தேதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. அதில் பல குளறுபடிகள் உள்ளன.
மேலும், முதன்மைப் பாடப்பிரிவில் 112 மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கி இருப்பதும், முதன்மை பாடத்தில் 54 மதிப்பெண்கள் எடுத்த நபருக்கு 50க்கு 49 மதிப்பெண்கள் வழங்கியிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தேர்வினை ரத்து செய்ய வேண்டும். கவுரவ விரிவுரையாளர் பணிக்கு மட்டும் 15 மதிப்பெண்கள் பணி அனுபவத்திற்கு வழங்க வேண்டும். 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக உடனடியாக புதிய அறிவிப்பை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் கட்டுரை வினா தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறையை தவிர்த்து அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் போட்டித் தேர்வினை போன்றோ தமிழக உயர் கல்வித் துறை வெளியிட்ட யுஜிசி வழிகாட்டுதல்படியோ தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
