×

தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தகுதி வரம்புகள் குறித்த கட்டுப்பாடுகளை மாற்ற கோரி வழக்கு: பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை சேர்ந்த வழக்கறிஞர் கே.ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட அலுவலர் நியமனம் தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி கொண்டு வந்த அறிவிப்பானை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஒன்றாம் தேதி சட்ட அலுவலர் நியமனம் தொடர்பாக தகுதி வரம்புகளை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.

வழக்கறிஞர் சட்டம்-1961ன் படி சென்னை நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நியமிக்கப்படும் சட்ட அலுவலர் நியமனத்தில் கண்டிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர் மட்டுமே தகுதி உடையவர்களாவர். ஆனால், உச்ச நீதிமன்ற சட்ட அலுவலருக்கான தகுதி வரம்புகளில் வழக்கறிஞர் சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்தால் போதும் என்ற நிலை உள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக தான் பணிபுரிந்து வருவதாகவும், தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை மூலம் என்னைப் போன்ற ஏராளமான வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக தமிழக முதல்வர், சட்ட அமைச்சர், அட்வகேட் ஜெனரல், தலைமை செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை என்று கூறயிருந்தார். இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.

Tags : Tamil Nadu ,Court ,Tamil Nadu government ,Chennai ,K. Rajan ,Aragandanallur ,Villupuram district ,Madras High Court ,
× RELATED அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை...