- கடலூர்
- விழுப்புரம்
- டிஐஜி
- அருலராசு
- ஓராத்தூர், கடலூர் மாவட்டம்
- லட்சுமி
- ஓராத்தூர் காவல் நிலையம்
- கடலூர் மாவட்டம்
விழுப்புரம்: தொலைந்துபோன பத்திரங்களுக்கு முறைகேடாக சிஎஸ்ஆர் போட்டுக் கொடுத்த கடலூர் மாவட்டம் ஒரத்தூர் பெண் இன்ஸ்பெக்டரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து டிஐஜி அருளரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டம் ஒரத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் லட்சுமி. இவர் கடந்த 2024-25ம் ஆண்டுகளில் கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் தொலைந்துபோன பத்திரங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் தொலைந்ததாக பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று போலியான சிஎஸ்ஆர் போட்டதாக புகார் எழுந்தது.
சென்னை, திருப்பூர், கடலூர் போன்ற பகுதிகளில் இருந்து சிலர் இங்கு வந்து தங்களது நில பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் இந்த தகவல் அப்போதைய கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ஜெயக்குமாருக்கு தெரியவரவே அவர் ரகசிய விசாரணை நடத்தினார். அப்போது இத்தகவல் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை கடலூர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றிய நிலையில் மீண்டும் விசாரணை தீவிரமானது. தொடர்ந்து அப்போதைய சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மற்றும் எஸ்பியால் நியமிக்கப்பட்ட ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் புவனகிரி காவல் நிலையம் வந்தும், வேறு பல வகையிலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர் லட்சுமி வழங்கிய சிஎஸ்ஆர் ஆவணங்களை சோதனை செய்து, அதுகுறித்து விசாரித்தபோது அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.
தொடர்ந்து அப்போதைய கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாருக்கு அறிக்கையாக அனுப்பினார். அதன் அடிப்படையில் அவர் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை டிஐஜிக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லட்சுமியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் டிஜிபி உத்தரவின் பேரில் அவரை பணியில் இருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்து நேற்றைய தினம் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு உத்தரவிட்டார்.
* தொடரும் டிஸ்மிஸ் அலறும் இன்சுகள்…
கடலூர் மாவட்டத்தில் குற்றச்சாட்டுகளில் சிக்கி இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு வருவதால் இன்ஸ்பெக்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெய்சங்கர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ஏற்கனவே பணியாற்றியபோது வழக்கு ஒன்றில் சரியாக புலன்விசாரணை மேற்கொள்ளாத குற்றச்சாட்டில் அவரை டிஸ்மிஸ் செய்து இதே விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு உத்தரவிட்டிருந்தார். தற்போது புவனகிரி காவல் நிலையத்தில் பணியாற்றி, ஒரத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதால் இன்ஸ்பெக்டர்கள் பீதியில் உள்ளனர்.
