×

ஆர்எம்கே கல்லூரி பட்டமளிப்பு விழா தன்னம்பிக்கையே வெற்றிக்கான வழி: மாணவர்களுக்கு ஐஓபி செயல் இயக்குநர் அறிவுரை

சென்னை: சென்னை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஆர்எம்கே கல்வி குழுமங்களின் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் யளமஞ்சி பிரதீப், ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிச்சாமி, டி.பிச்சாண்டி, முதல்வர் கே.ஏ.முகமது ஜூனைத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்வி குழும நிறுவனர், தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்து பேசும்போது, மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றம் அடைந்து, பெற்றோர்களுக்கும் கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த மாணவர்களின் வெற்றிக்கு பெற்றோர்களின் அர்ப்பணிப்பும், ஆசிரியர்களின் உழைப்பும் முக்கிய காரணம் என்று பாராட்டினார்.

சிறப்பு விருந்தினராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் ஜாய்தீப்தத்தா ராய் கலந்துகொண்டு, 768 மாணவர்களுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 46 மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுகளையும், தங்கப் பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தி பேசுகையில், ‘‘மாணவர்கள் தங்களது திறமைகளில் நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

தன்னம்பிக்கையே வெற்றிக்கான மிகப்பெரிய துணை. கல்வி மற்றும் திறன்களைப் பயன்படுத்தி சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், என்றார். மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் கம்யூனிகேஷன், மீடியா மற்றும் தகவல் சேவைகள் வணிகக் குழுமத்தின் மனிதவளத் தலைவர் ஸ்ரீராம் ஜோஷி, கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், தினமும் புதியவற்றைக் கற்றுக்கொண்டு அறிவை வளர்த்துக்கொள்வதே நீண்டகால தொழில் முன்னேற்றத்திற்கான முக்கியத் திறவுகோல்,’ என்றார்.

Tags : RMK ,College Convocation ,IOP ,Executive ,Chennai ,convocation ceremony ,RMK Engineering College ,Kavaripettai ,RMK Educational Group ,Vice President ,R.M. Kishore ,Yallamanji Pradeep ,M.S. Palanisamy ,D. Pichandi ,Principal ,K.A. Mohammed Junaid… ,
× RELATED பரிசு பொருளுடன் காத்திருந்து…...