×

சட்டசபையில் முதல்வராக விஜய் நடந்து கொள்ளவில்லை சோலியை முடித்துவிடுவேன் கழுத்தை வெட்டிடுவேன் என்பதா? நயினார் பாய்ச்சல்

தூத்துக்குடி: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் அளித்த பேட்டி:  தவெக நிர்வாகிகள் நேற்று மட்டும் 4 பேர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கின்றனர். ஆட்சியில் இருப்பதால் தவெகவினரை காவல் துறையினர் கைது செய்ய முடியாத ஒரு சூழ்நிலை. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. தமிழகம் மிக மோசமான சூழ்நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் வருங்காலத்தில் தீர்ப்பு சொல்வார்கள். சட்டமன்றத்தில் முதல்வர் செயலுக்கு பாஜ மிகுந்த கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

முதல்வர், முதல்வர் என்ற தன்மையில் நடந்து கொள்ளவில்லை. கையை வீசி நான் சோலியை முடித்து விடுவேன், நான் கழுத்தை வெட்டி விடுவேன் என்று சொல்கிறார். முதல்வர் இப்படி சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அப்பாவை காணவில்லை என்கிறார் எந்த அப்பாவை தேடுகிறார் என்று எனக்குத்தெரியவில்லை. இன்று ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 3 மாநில முதல்வர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் எங்கே என்றால் அரிவாளை வைத்து வெட்டி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வருக்கு தமிழகத்தைப்பற்றியோ, தமிழக மக்களை பற்றியோ கவலை இல்லை. 3 மாநில முதல்வர்கள் கூட்டம் போட்டு பேசுகின்றனர். அதில் இவர் கலந்து கொள்ளவில்லை. போகவில்லையா? அல்லது தெரியவில்லையா? என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன்.

போதைப் பொருள் கலாசாரத்தை ஒழிக்க மாரத்தான் ஓடினால் மட்டும் முடியாது. காவல் துறையை சுதந்திரமாக இயங்க விட வேண்டும். அப்போது தான் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க முடியும். சினிமாவில் ஓடுவது போன்று ஓடிக்கொண்டு ஸ்டூடியோவில் நடப்பது போன்று சட்டமன்றத்தில் நடந்து கொண்டால், வாக்களித்த மக்கள் எப்படி திரும்ப போகிறார்கள் என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,Chief Minister ,Soli ,Nainar ,Thoothukudi ,BJP ,president ,Nainar Nagendran ,Thoothukudi airport ,Thaveka ,
× RELATED பரிசு பொருளுடன் காத்திருந்து…...