நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 16ம் தேதி முட்டை விலை 645 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். கடந்த 10 நாட்களாக இந்த விலையில் மாற்றம் இன்றி நீடித்து வந்தது.
இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 650 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் முட்டை விலை இந்த ஆண்டில் 2வது முறையாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
