×

மக்கள் பிரச்னைகளை பேச வேண்டிய சட்டமன்றத்தில் ஷூட்டிங் மட்டும் தான் நடக்கிறது: தமிழக பாஜ தலைவர் விமர்சனம்

சென்னை: சென்னையில் ம.பொ.சி.யின் பிறந்தநாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ம.பொ.சி.க்கு எதிராக முதல்வராக இருந்து சபையை நடத்தினார். அன்றைக்கு சட்டசபை நடக்கும்போது நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்தது. ஆனால், இன்றைக்கு சபை ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடப்பதுபோல் உள்ளது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்டியதற்கும், பாஜவுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. தவெக அரசு ஒரு தனி அரசாக நடந்துகொண்டு இருக்கிறது. சினிமா ஷூட்டிங் ஸ்டுடியோவில் தான் நடக்கும்; ஆனால், இப்போது சட்டமன்றத்திற்குள்ளேயே நடக்கிறது. முதல்வர் சைகை காட்டுகிறார், அப்பாவை காணோம் என்கிறார்.

அப்பாவைக் காணோம் என்றால் எந்த அப்பாவைச் சொல்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் தப்பாக ஏதோ அப்பாவை நினைத்துக்கொண்டு பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரின் அப்பா யார் என்பதை அவரின் அம்மாதான் சொல்ல முடியும். ஆனால், இவர் யாரைச் சொல்லி எந்த அப்பாவைத் தெடுகிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,BJP ,Chennai ,president ,Nainar Nagendran ,M.G.C. ,Former ,Chief Minister ,MGR ,
× RELATED அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை...