- ஓடத் தொடங்கு, போதைப்பொருட்களை நிறுத்து, ஓடு.
- அனைத்துலக எதிர்ப்பு மருந்து நாள்
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- சர்வதேச…
சென்னை: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் என்ற போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார். ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம்’ சென்னை காமராஜர் சாலையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் இருந்து முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தது, ‘ஸ்போர்ட்ச எடு-டிரக்ச விடு’ என்ற வாசகத்தை எழுதி கையொப்பமிட்டதுடன், போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன், அண்ணா நினைவிடம் தொடங்கி காந்தி சிலை வரை முதல்வர் ஓட்டத்தில் பங்கேற்றார். இதில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, வெங்கடரமணன், மரிய வில்சன், குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்,
சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் சந்தீப் நந்தூரி, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
