×

ஐபிஎல் போட்டியின் போது போதை பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்: தவறான தகவல் என வீடியோ மூலம் விளக்கம்

சென்னை: ஐபிஎல் போட்டியின் போது எனது குழந்தைக்கு உடல் நலன் சரியில்லாததால், மாத்திரையை உடைத்து தூளாக்கி கொண்டிருந்தேன். அந்த வீடியோவை தற்போது சிலர் வேண்டும் என்றே போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு வீடியோ பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் சரத்குமார் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார், சேப்பாக்கம் மைதானத்தில் நண்பர்களுடன் ஐபிஎல் போட்டி பார்க்கும் போது, போதை பொருளை தூளாக்கி கொண்டிருப்பதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து அமைச்சர் சரத்குமார் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: போதை இல்லா சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக காலையில் விழிப்புணர்வு செய்தேன். நான் சென்று வந்த பிறகு ஒரு தப்பான புரளி ஒன்று பரப்பி உள்ளனர்.

நான், ஐபிஎல் கிரிக்ெகட் போட்டி பார்க்க 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தேன். அங்கு என் மனைவி, குழந்தை மாத்திரையை விழுங்காமல் அடம்பிடித்து அழுகிறது என்றார். எனவே நான் மாத்திரையை தூளாக உடைத்து கொடுத்தேன். ஐபிஎல் போட்டியில், அதுவும் மைதானத்தில் அவ்வளவு கூட்டம், அவ்வளவு போலீஸ் இருக்காங்க, எனது முன்பும், பின்பும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் மாத்திரையை தூளாக உடைத்த அந்த காட்சியை எடுத்து தற்போது போதை பொருள் பயன்படுத்தியதாக, ஒரு அவதூறு வீடியோவை பரப்பி வருகின்றனர். இது ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அப்படி எல்லாம் தயவு செய்து பண்ணாதீங்க. இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Minister ,Sarathkumar ,IPL ,Chennai ,
× RELATED அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை...