அஞ்சல் துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு விழிப்புணர்வு விழா

பாபநாசம், மார்ச் 10: இந்திய அஞ்சல் துறை தஞ்சாவூர் கோட்டம் தலைமை அஞ்சலகம் சார்பில் உலக மகளிர் தின செல்வ மகள் சேமிப்பு விழிப்புணர்வு விழா பாபநாசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் கோட்டம் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். பாபநாசம் போஸ்ட் மாஸ்டர் சுமதி, கோட்ட அஞ்சல் ஆய்வாளர் பால முரளி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் விவேகானந்தா அறக்கட்டளை தங்க. கண்ணதாசன், டாக்டர் திலகவதி, டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் தினேஷ் கண்ணா , டாக்டர் ஹேமாவதி, இனாம் கிளியூர் ஊராட்சி மன்றத் தலைவி பாக்கியலெட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் மகளிர் தினத்தை முன்னிட்டு 152 ஏழை குழந்தைகளுக்கு ரூ.250 வீதம் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் நன்கொடையாளர்கள் மூலம் புதிய கணக்கு தொடங்கி பாஸ் புக் வழங்கப்பட்டது.

Related Stories: