மாயமான சிறுமி மீட்பு

 

பெருந்துறை, ஜூன் 25: பெருந்துறை பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வீட்டில் பெற்றோரிடம் கோபித்து கொண்டு நேற்று முன்தினம் மாலை திடீரென வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பல்வேறு பகுதியில் தேடியும் சிறுமி கிடைக்காததால் இதுகுறித்து அவரது பெற்றோர், காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எஸ்ஐ ஆனந்த் ஜோதி தலைமையில் சிறப்பு படையை சேர்ந்த பெண் போலீசார் சிறுமியை பல்வேறு பகுதியில் தேடி வந்தனர்.அப்போது, பெருந்துறை அருகே துடுப்பதியில் இருந்து கோபி செல்லும் அரசு பஸ் ஒன்றில் சிறுமி சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சிங்கப்பண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: