அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: அதிமுக நிர்வாகி கைது

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பள்ளிவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் ஏங்கல்ஸ் (55). அதிமுககோட்டூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளராகவும், மாநில பேச்சாளராகவும் இருந்து வரும் இவர், கடந்த சில வருடங்களாக கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று ஏமாற்றி வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மன்னார்குடி அடுத்த கீழமருதூர் கிராமத்தை சேர்ந்த வினோத், கூத்தாநல்லூர் அடுத்த திருநெல்லிக்காவல் கிராமத்தை சேர்ந்த பால ஐஸ்வர்யா ஆகியோரிடம் ஏங்கல்ஸ் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி இருவரிடமும் தலா 2 லட்சம் என மொத்தம் 4 லட்சம் பணம் பெற்று கொண்டு, வேலை வாங்கி தராமல் ஏமாற்றி உள்ளார்.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கும் அவர் கொடுக்க மறுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் நேற்றுமுன்தினம் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதுகுறித்து கோட்டூர் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிந்து ஏங்கல்ஸை நேற்று அதிரடியாக கைது செய்தார்.

Related Stories: