கேரள அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் சாதாரண அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியது. இந்த திட்டத்திற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் இலவச பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தத் திட்டத்தை தடை செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.

அரசியல் லாபத்திற்காக தொடங்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: