ஜப்பான் துனிசியா மோதிய போட்டி எண் 1000

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றில் ஆயிரமாவது போட்டியில் விளையாடிய அணிகள் என்ற பெருமை ஜப்பான், துனிசியாவுக்கு கிடைத்துள்ளது. மான்டெர்ரி ஸ்டேடியத்தில் நடந்த இந்த எப் பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் துனிசியாவை போட்டுத் தாக்கியது. ஜப்பான் வீரர்கள் டாய்சி கமடா (4வது நிமிடம்), அயசே யூடா (31’ மற்றும் 83’), ஜுன்யா இடோ (69’) ஆகியோர் கோல் அடித்தனர்.

நாக் அவுட் சுற்று வாய்ப்பை ஜப்பான் அதிகரித்துக்கொண்ட நிலையில், துனிசியா பரிதாபமாக வெளியேறி உள்ளது. கமடா 4வது நிமிடத்தில் போட்ட கோல், உலக கோப்பையில் ஜப்பான் வீரர் ஒருவர் அதிவிரைவாக அடித்த கோலாக முதலிடம் பிடித்துள்ளது.

முன்னதாக, 2018 தொடரில் கொலம்பியாவுக்கு எதிராக ஷிஞ்ஜி ககவா 6வது நிமிடத்தில் கோல் போட்டு படைத்த சாதனையை கமடா முறியடித்துள்ளார். நடப்பு தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 12 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடம் பிடித்த அணிகளில் சிறந்த 8 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்

Related Stories: