அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு விதிகள் வகுக்கப்படாத நிலையில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை வருமாறு:
புதிய ஓய்வூதிய திட்ட விதிகள் அறிவிக்கப்படும் வரை ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடி வாழ்வாதார ஆதரவு அளிக்கும் வகையில் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு கடைசி அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000- இந்த இரண்டில் எது அதிகமோ அதை எடுத்துக்கொண்டு, அதன் மீது 50 சதவீதம் அகவிலைப்படி சேர்த்து மாதாந்திரம் வழங்கப்படும். ஓய்வு பெற்ற பிறகு மரணமடைந்தால் இடைக்கால தொகையில் 60 சதவீதம் குடும்பத்தாருக்கு வழங்கப்படும். பணியில் இருக்கும்போதே மரணமடைந்தால் தகுதியான குடும்ப உறுப்பினருக்கு தனி இடைக்கால குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியத் திட்டம் விதிகள் அறிவிக்கப்பட்டவுடன் இந்த இடைக்கால உத்தரவு தானாக ரத்து செய்யப்படும். இடைக்கால தொகைக்கும் இறுதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட தொகைக்கும் உள்ள வித்தியாசம் சரிசெய்யப்படும். தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை பின்னர் மீட்கப்படும். இந்த உத்தரவு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உடனடி நிதி உதவியை உறுதி செய்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: