நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தவிர்த்து யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு

 

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தவிர்த்து யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தற்போது யுபிஎஸ்சி முதன்மை தேர்வு பயிற்சிக்கு நான் முதல்வன் பெயரை தவிர்த்து ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரையே குறிப்பிடாமல் அரசு அறிக்கை. எனினும், இணையதள முகவரியில் ’நான் முதல்வன்’ என ஆங்கிலத்தில் இருப்பதை அரசு கவனிக்கவில்லை.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ் நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்: (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி /இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc registration/) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: