மேகதாது அணைக்கு எதிராக நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்!

 

சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் முதல் நாள் என்பதால் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றி தொடங்கி வைத்தார். அவரின் உரையில் தவெக அரசு திட்டமிட்டுள்ள பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார். இந்நிலையில் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தி நாளை தனித் தீர்மானம்; தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த அனுமதியும் தரக் Live கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

 

Related Stories: