நீட் மறுதேர்வு 21ம் தேதி நடக்கும் நிலையில் விடைத்தாள் மீண்டும் கசியாமல் இருக்க தேர்வு மையங்களில் 5 லட்​சம் வீரர்கள் பாதுகாப்பு

 

டெல்லி: கடந்த நீட் தேர்​வின் போது ஒரு கும்பல் டெலிகி​ராம் செயலியை பயன்​படுத்தி வினாத்​தாள்களை கசி​ய​விட்​டது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு வரும் 21ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்தது போன்று மீண்டும் ஒரு சம்​பவம் நிகழ்​வதை தடுக்க, வரும் 22ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு ஒன்றிய அரசு தற்​காலிக​மாக தடை விதித்​துள்​ளது. மேலும் நீட் வினாத்​தாள் தயாரிப்​பில் ஈடு​பட்ட அனைத்​து பணியாளர்களும் வரும் 21ம் தேதி வரை தனிமைப் படுத்தப்பட்டுள்​ளனர். அவர்​கள் செல்​போன், லேப்​டாப் மற்றும் தனிப்​பட்ட தகவல் தொடர்பு சாதனங்​களை பயன்படுத்த அனு​மதி இல்​லை.

நீட் வினாத்​தாள்​களை பாது​காப்​பாக கொண்டு செல்​வதற்​காக, முதல் முறை​யாக இந்​திய விமானப் படை (ஐஏஎப்) ஈடு​படுத்​தப்பட உள்​ளது. ஒன்றிய அரசின் உத்தரவின்படி, வினாத்​தாள்​கள் அதன் உற்​பத்தி மையங்​களில் இருந்து புறப்​பட்​டது முதல் பயணம் முழு​வதும் மாநில போலீசாரின் பாது​காப்​புடன் கொண்டு செல்​லப்​படும். மேலும், ஐத​ரா​பாத் மற்​றும் அகம​தா​பாத் ஆகிய முதன்மை மையங்​களில் இருந்து தேர்வு நடத்​தப்​படும் 551 நகரங்​களின் மையங்​கள் வரையி​லான ஒட்​டுமொத்த பயணத்​தி​லும் சிஐஎஸ்​எப் மற்​றும் சிஆர்​பிஎப் வீரர்​கள் தீவிர​மாக பாது​காப்​பார்​கள். மேலும், தேர்வு செயல்​முறை முழு​வதும் தொடர்ச்​சி​யான கண்​காணிப்பை உறுதி செய்ய, என்​டிஏ பல அடுக்கு பாது​காப்பு உள்​கட்​டமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளது.

தேர்வு மையங்​கள் முழு​வதும் 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பாது​காப்​புப் பணி​யாளர்​கள் பணி​யமர்த்​தப்​பட்டு வருகின்​றனர். வினாத்​தாள் கசிந்​து​விட்​ட​தாக கூறப்​படும் வதந்​தி​களை மாணவர்​கள் நம்ப வேண்​டாம் என்று என்​டிஏ மீண்​டும் மீண்​டும் எச்​சரித்​துள்​ளதுடன், தேர்​வுக்கு முன்​பாக யாரும் வினாத்தாளை பெற முடி​யாது என்​றும் திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது. தவறான தகவல்​களை பரப்​புபவர்​கள் அல்​லது மோசடி செய்ய முயற்​சிப்​பவர்​கள் மீது சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது.

Related Stories: