சென்னை: தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆளுநர் அர்லேகர் உரையாற்றியுள்ளார். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவேண்டும். உச்சநீதிமன்ற கிளையை தமிழ்நாட்டில் நிறுவவேண்டும். ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை முடித்த பிறகு தமிழ்நாடு அரசு சமூகநீதி ஆய்வை மேற்கொள்ளும். தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது
