- பாராளுமன்றக் குழு
- புது தில்லி
- பாராளுமன்ற நிலைக்குழு
- திக் விஜய் சிங்
- கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
புதுடெல்லி: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு குறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்ற குழு தேர்வு வடிவமைப்பை மறுஆய்வு செய்யவும் வலியுறுத்தி உள்ளது. கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் நலம் மற்றும் விளையாட்டுத்துறைக்கான எம்பி திக் விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவானது கியூட் தேர்வு முறை குறித்த அறிக்கையை நேற்று முன்தினம் மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையில் குழு கூறியிருப்பதாவது, ‘‘மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி அமைப்பின் மீதான சுமையைக் குறைக்கவும், பல்வேறு கல்வி வாரியங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களை சமமான நிலையில் கொண்டு வரவும் 2022-2023ம் கல்வியாண்டில் இந்த தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இளங்களை படிப்புக்களுக்கான பொதுவான சேர்க்கை முறையாக கியூட் ஐ அறிமுகப்படுத்துவதன் நன்மைகள் குறித்து குழுவின் சில உறுப்பினர்களுக்கு உடன்பாடு இல்லை.
சுயாதீனமாக மற்றும் தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் கூடிய சிந்தனையை அடிப்படையாக கொண்ட மனிதநேரம் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு பலவுள் தெரிவு வினா(எம்சிக்யூ) முறை மிகவும் பொருத்தமற்றது. தேசியக் கல்விக்கொள்கை 2020ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்தை இந்த தேர்வு பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கு கியூட் தேர்வின் வடிவமைப்பு மற்றும் வினாத்தாள் தரம் ஆகியவற்றை மறு ஆய்வு செய்வதற்கு குழு பரிந்துரைக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
