×

சபரிமலை கோயில் கூரையில் தங்க தகடுகள் நிறம் மாறியது ஏன்..? பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட மேற்கூரையின் மீது பக்தர்கள் நெய் வீசியதால் அதன் நிறம் மாறியது என தெரியவந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேற்கூரை, பக்கச்சுவர்கள், படிகள் ஆகியவற்றில் சுமார் 30 வருடங்களுக்கு முன் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் துவாரபாலகர் சிலைகள், கதவு மற்றும் நிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கத்தகடுகள் திருடப்பட்ட சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த சிறப்பு புலனாய்வுக் குழு சபரிமலை கோயிலில் ஆய்வு நடத்தியது. அப்போது கோயிலின் கூரையில் ஒரு சில இடங்களில் நிறம் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே சபரிமலையில் மேலும் தங்கத்தகடுகள் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால் சிறப்பு புலனாய்வுக் குழு இது தொடர்பாக விசாரணை நடத்த தீர்மானித்தது. இதன்படி நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் மேற்கூரையில் பரிசோதனை நடத்தினர்.

இதில் பக்தர்கள் கூரையின் மீது நெய் வீசியதால் தான் தங்கத்தகடின் நிறம் மாறியது என கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நெய் வீசப்பட்ட பகுதி கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

Tags : Sabarimala temple ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...