×

2025-26ம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “2025-26ம் நிதியாண்டில் இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இந்த மைல்கல் சாதனை, முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.54 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 15.6 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த உற்பத்தியில் சுமார் 76 சதவீதம் அளவுக்கு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், இதர பொதுத்துறை நிறுவனங்களும் பங்களித்துள்ளன. தனியார் துறை 24 சதவீத பங்களிப்பை தந்துள்ளது.

2025-26ம் நிதியாண்டில் தனியார் துறையின் பங்களிப்பு சுமார் ரூ.42,000 கோடியாக அதிகரித்தது. பாதுகாப்பு தளவாட உற்பத்தி சூழலில் விரிவடைந்து வரும் அவற்றின் பங்களிப்பை இது பிரதிபலிக்கிறது. பல ஆண்டுகளாக நடைபெறும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி 2025-26ம் நிதியாண்டில் ரூ.38,424 கோடி என்ற சாதனை அளவிலான பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிய அடைய பெரிதும் பங்களித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் எக்ஸ் பதிவில், “சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி பாதுகாப்பு உற்பத்தி துறை மற்றும் அது சார்ந்த அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியின் விளைவு. இந்த வளர்ச்சி நாட்டின் விரிவடைந்து வரும் பாதுகாப்பு தொழில் கட்டமைப்புக்கு ஒரு தெளிவான சான்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : India ,Union government ,New Delhi ,Union Defence Ministry ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...