×

ராகுல் காந்தி மீது கூட்டணி கட்சிகளுக்கும் நம்பிக்கை இல்லை: பாஜ கடும் விமர்சனம்

புதுடெல்லி: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில் கடந்த 15ம் தேதி வெளியான தலையங்கத்தில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் ராகுல் காந்தி நடந்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பாக பாஜ செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுகவின் விமர்சனமானது, ராகுல் காந்தியின் தலைமை மீது எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சுமையாக உள்ளார். ராகுல் காந்தி மீது பொதுமக்களுக்கோ அல்லது அவரது கூட்டணிக் கட்சிகளுக்கோ நம்பிக்கை இல்லை. ராகுல் காந்தி அரசியல் முதிர்ச்சியற்றவர். ராகுல் காந்தி மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் தனது கூட்டாளிகளைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்துவிடுகிறது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பி அவருக்கு கீழ் பணியாற்றுவதில் தங்களுக்கு உள்ள தயக்கங்களை வெளியிட்டுள்ளனர். கூட்டணியில் உள்ள மிக பெரிய கட்சியான சமாஜ்வாடி காங்கிரஸ் பற்றி புகார் அளித்துள்ளது. இரண்டாவது பெரிய கட்சி திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே சீர்குலைந்து விட்டது. மூன்றாவது பெரிய கட்சியான திமுக, இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கும் ராகுல் காந்தி மீது புகார்கள் உள்ளன. பழமையான கட்சிகளான இடதுசாரிக் கட்சிகளும் இதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளன என்றார்.

Tags : Rahul Gandhi ,BJP ,New Delhi ,DMK ,Murasoli ,Bharatiya Janata Party ,Shehzad Poonawalla ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...