புதுச்சேரியில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. மே மாதம் 13ம் தேதி முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பாஜவை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர் காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். புதுச்சேரியில் 5 அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இரண்டு பேர் மட்டுமே ஒரு மாதகாலமாக பொறுப்பில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. நேற்று நடந்த விழாவில் புதிய அமைச்சர்களாக என்.ஆர்.காங்கிரஸ் ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜக ஜிஎன்எஸ்.ராஜசேகர் ஆகியோர் கடவுளின் பெயரால் உறுதிமொழி கூறி அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

Related Stories: