திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே செருகுடி பகுதியை சேர்ந்த பிரேம்குமார் மனைவி சத்யா(32). பேரளம் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தம்பதி இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் விக்னேஷ் (30) என்பவர் சத்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்ள சத்யா முடிவு செய்து அவரது வீட்டில் வசித்து வந்தார். ஆனால், விக்னேஷிற்கு வேறு இடத்தில் பெண் பார்த்ததால் சத்யா விரக்தி இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து சத்யா விக்னேஷ் (30) சென்றுள்ளார்.
அங்கு திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதனால் தீக்காயத்துடன் அலறிய அவரை, காப்பற்ற முயன்ற விக்னேஷ் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் அலறும் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
