கடும் மின்சார பற்றாக்குறை கேரளத்தில் 30ம் தேதி வரை மின்வெட்டு

திருவனந்தபுரம்: கேரளத்தில் நீர் மின்சாரம் தான் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. பருவமழை தொடங்கிவிட்ட போதிலும் இன்னும் தீவிரமடையவில்லை. எல்நினோ தாக்கம் காரணமாக கேரளத்தில் வெப்பநிலை இன்னும் குறையவில்லை. இதனால் மழைக்காலம் தொடங்கிய பிறகும் மின் தேவை அதிகரித்து வருகிறது.வழக்கமாக ஜூன் மாதத்தில் 4100 மெகாவாட் மின்சாரம் தான் கேரளத்திற்கு தேவைப்படும். ஆனால் இப்போது பயன்பாடு 4900 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனால், வரும் 30ம் தேதி வரை கேரளத்தில் மாலை 6 மணிக்கும், நள்ளிரவு 12 மணிக்கும் இடையே மின்வெட்டு அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Stories: