திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் எதிர்பாராதவிதமாக பி.எஸ்.என்.எல். செல்போன் நெட்வொர்க் மற்றும் இணைய சேவை பல மணி நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 மணி நேரமாக பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் முடக்கம் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.
நள்ளிரவு முதல் மொபைல் நெட்வொர்க் மற்றும் இணைய சேவை கிடைக்காததால் கடும் சிரமத்தில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். பி.எஸ்.என்.எல். சேவை முடங்கி இருப்பதால் அரசு அலுவலக சேவைகள், ஆன்லைன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களால் சிக்னல் பெற முடியவில்லை, இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை மற்றும் அழைப்புகள் மேற்கொள்ளவும் முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் தனிநபர் மற்றும் வணிக ரீதியான தொடர்புகள் பெரிதும் தடைபட்டது.
தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியின்போது சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் நெட்வொர்க சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
