திருச்செங்கோட்டில் ₹15 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு, மார்ச் 8: திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள்  ஏலம் நடந்தது. ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 600 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ₹7,299    முதல் ₹8,332  வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ₹5,706 முதல் ₹6,399 வரையும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் ₹10,499 முதல் ₹13,989 வரை விலை போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 600 மூட்டை மஞ்சள், ₹15 லட்சத்துக்கு ஏலம் போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>