கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை வன்கொடுமை சம்பவத்தில் ஒருவருக்கு மட்டுமே தொடர்பு: காவல்துறை விளக்கம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. உடனடியாக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதையடுத்து குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள பிபின் மஞ்சு என்பவருக்கு மட்டுமே குற்றத்தில் தொடர்பு இருப்பதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: