மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட தவெகவினர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள்,  நியாயம் கேட்ட பார் உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது போலீசார் தவெக நிர்வாகிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். தவெக ஆட்சி அமைத்தவுடன் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் மூடப்பட்டன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊதியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு டாஸ்மாக் பாரானது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மூடப்பட்டது.

தற்போது கடையில் உள்ள கேமரா, டேபிள் உள்ளிட்டபொருட்கள் திருட படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஒரு பாதுகாவலர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கார்த்திக், முத்துக்குமார், வலுப்பூரான், பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மது போதையில் இந்த பகுதியில் மூடப்பட்டிருந்த பாருக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பார் நடத்துனர் மருதமுத்துவிற்க்கு பாதுகாவளர் கொடுத்த தகவலினால் அவர் அங்கு வந்து நியாயம் கேட்டார். அப்பொழுது போதையில் இருந்த தவெக நிர்வாகிகள் அவரை சரமாரியாக கத்தியில் தாக்கி தப்பி சென்றனர். இதில் வயிறு மற்றும் நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவரை பாதுகாவலர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் மருதமுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இதனிடையே ஊதியூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தவெக நிர்வாகிகள் 4 போரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: