மேகதாது அணை தொடர்பான அறிக்கையை பிரதமரிடம் நேரில் வழங்கிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார்..!!

பெங்களூரு: மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எந்த தடையும் இல்லாததால், இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், அணை கட்டுவதில் எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறி திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும்நிலையில், பிரதமர் மோடியை டி.கே. சிவகுமார் சந்தித்துப் பேசியுள்ளார்.

Related Stories: