இயக்குநர் இமயம் பாரதிராஜா நல்லடக்கம் செய்யும் இடத்தில் தென்மண்டல ஐஜி ஆய்வு!

 

தேனி: இயக்குநர் இமயம் பாரதிராஜா நல்லடக்கம் செய்யும் இடத்தில் தென்மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டார். இயக்குனர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார். இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1941ம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் தேனியில் பிறந்தவர் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. சுகாதார ஆய்வாளராக தனது பணியை தொடங்கியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் ’16 வயதினிலே’ முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார். ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்றவர். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார் பாரதிராஜா. தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் `முதல் மரியாதை` திரையிடப்பட்டது. 2004ல் பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது ஒன்றிய அரசு. இயக்கம், தயாரிப்பு, கதாசிரியர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் என ரசிகர்களை ஈர்த்தவர். ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.

மொத்தம் 44 படங்களை பாரதிராஜா இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதலமைச்சர் உத்தரவை அடுத்து பாராதிராஜா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா நல்லடக்கம் செய்யும் இடத்தில் தென்மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டார். பாரதிராஜா உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, தேனி ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தேனி காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணையில் பாரதிராஜா உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

 

Related Stories: