×

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல், ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவை பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

Tags : Chennai ,Mid-West ,Andhra Pradesh ,Tamil Nadu ,Chengalpattu ,Kanchipuram ,
× RELATED பொது இடத்தில் பிறந்த நாள் கேக் வெட்டி...