80 வயது ‘சின்னப்பொண்ணு’வை கொன்று பலாத்காரம் செய்த 65 வயது வியாபாரி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் 80 வயது மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொன்று பலாத்காரத்தில் மீன் வியாபாரி ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நாகப்பட்டினம் நகரின் மையப்பகுதியான அண்ணாசிலை அருகே மீன்மார்க்கெட் உள்ளது. இதன் அருகே 80 வயதான மூதாட்டி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு கடந்த 9ம்தேதி தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சென்று ஆய்வு செய்தனர்.

இதில் மூதாட்டியின் முகத்தை நாய் கடித்து சிதைந்து இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நாகப்பட்டினம் வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு (80) என்பதும், அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்வதும் தெரியவந்தது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, அப்பகுதியில் சுற்றித்திரிந்த முதியவரை சந்தேகத்தின் பேரில் நேற்றுமுன்தினம் இரவு பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இடையர் தெருவை சேர்ந்த ராமசாமி (65) என்பதும், நாகப்பட்டினம் சட்டையப்பர் வீதியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தங்கி மீன் வியாபாரம் செய்வதும் தெரியவந்தது.

அவர் மீன் வியாபாரம் செய்ய வரும் போது, கொலையான சின்னப்பொண்ணுவிடம் ஏற்பட்ட பழக்கத்தில் அவ்வப்போது இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், சம்பவத்தன்று இரவு சின்னப்பொண்ணுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், அதற்கு அவர் ஒத்துழைக்காததால் ஆத்திரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த பெரிய கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளார் என்றும், இறந்தது தெரிந்த பின்னர் அவரை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராமசாமியை கைது செய்தனர். பின்னர் நாகப்பட்டினம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நேற்று ராமசாமியை ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

* தந்தையுடன் சென்ற சிறுமிக்கு ரவுடி பாலியல் தொல்லை
திருச்சியை சேர்ந்த 15வயது சிறுமி, கடந்த 9ம்தேதி இரவு அரியமங்கலம் பகுதியில் உள்ள டீக்கடைக்கு தந்தையுடன் சென்றார். அப்போது அங்குபோதையில் நின்றிருந்த வாலிபர், சிறுமியை பார்த்து ஆபாச சைகை செய்துள்ளார். பின்னர் அருகே சென்று சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதில் அதிர்ச்சியடைந்த தந்தை தனது மகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் விசாரித்ததில், திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் பெரியார் தெருவை சேர்ந்த குஜிலி (எ) ரெங்கநாதன் (37) பாலியல் தொல்லை கொடுத்ததும், ரெங்கநாதன் சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ரெங்கநாதனை கைது செய்தனர்.

Related Stories: