டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்

நாமக்கல், மார்ச் 7: நாமக்கல் அருகே, உரிய ஆவனம் இல்லாமல் டூவீலர் மற்றும் காரில் கொண்டு செல்லப்பட்ட ₹4 லட்சததை பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் -சேந்தமங்கலம் ரோடு கொண்டம்பட்டிமேடு பகுதியில் நேற்று இரவு பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த பெண்ணை நிறுத்தி விசாரித்தனர். ஸ்கூட்டரை சோதனையிட்டதில் அதில் ₹2.27 லட்சம் இருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண்ணிடம் விசாரித்போது, அவரது பெயர் ஈஸ்வரி என்றும், காளப்ப நாயக்கன்பட்டி அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் பயிர்கடன் வாங்கி வருவதாகவும் கூறினார். இருப்பினும் உரிய ஆவனம் இல்லாததால் பணத்தை பறிமுதல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே காரில் வந்த, வாழைக்காய் வியாபாரி தங்கவேலை பறக்கும்படையினர் நிறுத்தி விசாரித்தனர். அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹1.70 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>