அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவிக்கு லெட்டர் பேட் மூலம் பரிந்துரை கடிதம் வழங்கிய தவெக மாவட்ட செயளாலரால் சர்ச்சை

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருவது வழக்கம். கடந்த காலங்களில் பள்ளிகளில் நியமிக்கப்படும் பொறுப்புகளில் பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக தேர்வு செய்யப்பட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் இந்தாண்டு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தற்போது மாணவர்கள் சேர்க்கை மற்றும் வகுப்புகளுக்கும் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு பெற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேர்வு செய்ய தவெக-வின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ், பள்ளி தலைமையாசிரியருக்கு தன்னுடைய லெட்டர் பேடில் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

பள்ளிகளில் நேரடி அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு கொண்டு வந்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர் கூட்டணி கட்சியான விசிக மாவட்ட செயளாலர் தமிழ்மணிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழங்க கோரி கட்சி லெட்டர் பேடில் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: