அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

அணைக்கட்டு, மார்ச் 6: அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் துணை அலுவலர் பழனி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகன், தேர்தல் துணை தாசில்தார் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 80 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த விவரங்கள் வைத்துக்கொண்டு நேரடியாக 80வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று அவர்களில் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க விருப்பமுள்ளவர்கள் யார்? அல்லது தபால் மூலம் வாக்களிக்க விரும்புவார்கள் யார்? என்பதை கேட்டறிந்து கையெழுத்து பெற்று ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று வாக்குசாவடி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.  இதில் மண்டல துணை தாசில்தார் பழனி, தாலுகா தேர்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் திருகுமரேசன் உட்பட 150க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: