காளையார்கோவில், ஜூன் 6: தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் கிளை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார்.
ஆசிரியை கீதா வரவேற்றார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி பசுமை உறுதிமொழி கூற அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டப் பணித்தள பொறுப்பாளர்கள் சித்ரா அருணா, பணியாளர் கருப்பாயி, ஆசிரியை வாசுகி கஸ்தூரி மற்றும் பள்ளி வளாகத்தில் மகிழ் முற்றம் அணிகள் சார்பாக மாணவ மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
