குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

மதுரை, ஜூன் 6: சீதோஷ்ண நிலை காரணமாக பரவும் நோய்களை தடுப்பதற்கு பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, ‘‘சீதோஷ்ண நிலை காரணமாக காலரா, காய்ச்சல், வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, இருமல், வாந்தி போன்ற நோய்கள் நீரின் மூலம் பரவுகின்றன.

அதை தடுப்பதற்கு குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். திறந்த வெளியில் இருக்கும் நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள், காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.’’என்றனர்.

 

Related Stories: