திருச்சியில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

திருச்சி, ஜூன் 6: திருச்சியில் மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி- திண்டுக்கல் சாலை கோரை ஆறு பகுதி அருகே கடந்த 4ம் தேதி திருச்சி மாவட்ட புவிசார் மற்றும் சுரங்க துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஒரு லாரி 4 யூனிட் மணலுடன் நின்றது. உடனே சுங்கத்துறை அலுவலர்கள் எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: