நத்தம், ஜூன் 6: நத்தம் அருகே ஏரக்காபட்டியை சேர்ந்தவர் வைரவன். விவசாயி. இவரது தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து உடனே நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு மறைவில் பதுங்கியிருந்த சுமார் 8 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் மீட்டு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள், அதனை கரந்தமலை மீதுள்ள அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
